பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஊடகங்களை சந்தித்தார். அப்போது, கடந்த மே 7 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது,” எனப் பெருமிதத்துடன் கூறிய அவர், காஷ்மீர், நீர்வளப் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்தியா தாக்குதல் மேற்கொண்டால், அதற்குப் பொருத்தமான பதிலடி தர பாகிஸ்தான் தயார் என்றும் எச்சரிக்கை விடுத்தார். "அமைதியை விரும்புகிறோம் என்றால், அதற்கான செயல்பாடுகளையும் நாம் எடுத்துக்காட்ட வேண்டும்," எனவும் கூறினார்.
இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பின், 4 நாட்களுக்கு கடும் பதிலடி நடந்தது.
இந்த தாக்குதலால் அச்சம் அடைந்த பாகிஸ்தான், சர்வதேச அளவில் உதவி கோரி, இறுதியில் இருநாடுகளும் சமாதானத்தில் ஒப்பந்தமிட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தான் தற்போது பேச்சுவார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்துள்ள நிலையில், "மூன்றாம் நபருக்கு இடமில்லை" என்பது இந்திய அரசின் நிலைப்பாடாகவே தொடர்கிறது.