காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு(வீடியோ)

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:21 IST)
உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் ஷூவை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வெல்வது ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமான ஒன்று. காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சிகளுமே தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், சீதாப்பூரில் ராகுல் காந்தி இன்று ரோட்ஷோ நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி பேசிக் கொகண்டிருக்கும்போது திடீரென ஒரு நபர் அவரை நோக்கி ஷூவை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
ஆனால், ஷூ ராகுல் காந்தி மீது படவில்லை. போலீஸார் ஷூ வீசிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 
 
 
அடுத்த கட்டுரையில்