மலையை குடைந்ததில் சுண்டெலிகூட சிக்கவில்லை: மோடி அரசை சாடும் சிவசேனா

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (16:31 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் போன்றவை ஒழிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
 
ஆனால், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டு பிரச்சனை தீரவில்லை எனவும், இந்த நடவடிக்கையினால் அரசு செலவழித்த தொகைதான் அதிகம் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டது. 
 
இந்நிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கு வெறுப்பையும், மோசமான அறிவுரைகளையும் செலுத்தி செயல்படுத்தப்பட்ட இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தேசப்பற்றுடன் கொண்டுவரப்பட்டது என்று கூற முடியாது. 
 
சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் மூலம், மலையை தோண்டி பார்த்தும், ஒரு சுண்டெலிகூட வெளியேவரவில்லை என்பதுதான் தெளிவாகிறது. மத்திய அரசு இந்த பொருளாதாரத்தையே சிதைத்து இருக்கிறது.
 
மேலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. தீவிரவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
நாடு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை, இழப்பை சந்தித்தபோதிலும், மோடி அரசு தொடர்ந்து பெருமை பேசித்தான் வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்த ஒன்று ரிசர்வ் வங்கியே கூறிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்