ஒன்றுக்கும் உதவாத மோடியின் நடவடிக்கை: ஆர்பிஐ அறிக்கை

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (15:42 IST)
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால கள்ள நோட்டி பிரச்சனை தீரவில்லை எனவும், இந்த நடவடிக்கையினால் அரசு செலவழித்த தொகைதான் அதிகம் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு இரவோடு இரவாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது மக்களுக்கு பேரடியாய் இருந்தது. 
 
இந்நிலையில், பணமதிப்பிழப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ. அதில், 99 சதவிகிதத்துக்கும் மேலான தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. 
 
கருப்புப்பணம் முழுமையாக இன்னும் மீட்கப்படாத நிலையில் அதற்காக அரசு செலவழித்த தொகை அதிகம். கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. புதிய ரூபாய் 500 மற்றும் ரூபாய் 2,000 நோட்டுகளிலும் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் நிதியாண்டில் கள்ள நோட்டுகளை ஒட்டுமொத்த கண்டுபிடிப்பு முந்தைய நிதியாண்டை விட 31.4% குறைவாகத்தான் உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்