மூன்றாவது நாளாக உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:41 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று 3வது நாளாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அதிரடியாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த வாரம் செவ்வாய் புதன் ஆகிய இரண்டு நாட்களிலும் பங்குச்சந்தை உயர்ந்தது
 
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்து உயர்ந்து உள்ளது என்பதும் தற்போது 360 க்கும் மேற்பட்ட புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 58 ஆயிரத்து 800 க்கும் மேல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து உள்ளது என்பதும் 17500க்கும் மேல் புள்ளிகளில் நிப்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்