’மோடி உருக்கும்’ - ஒரே நாளில் மகிழ்ச்சியும் வருத்தமும்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (10:28 IST)
செப்டம்பர் 11 தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள், விமானங்களை கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன் உலகின் வல்லரசு நாடான அமெரிக்க நாட்டின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தினர்.  


 
 
அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினத்தையொட்டி,  தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் நரந்திர மோடி நினைவஞ்சலி செலுத்தினார்.
 
இது குறித்தி, அவர் டுவிட்டரில் கூறியதாவது, “செப்டம்பர் 11-ம் தேதியில் மிகவும் முரண்பாடான இரண்டு வரலாற்று பிம்பம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இதே நாளில் தான் விவேகனந்தர் உலகப் புகழ்பெற்ற சிகாகோ உரையை அமெரிக்காவில் மேற்கொண்டுடார். அப்போது, அவர் இந்தியாவின் உயரிய கலாச்சாரத்தையும், சர்வதேச சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தின் வலிமையையும் வெளிப்படுத்தி ஏராளமான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.” என்றார்.
அடுத்த கட்டுரையில்