பெங்களூரில் கணவனின் துணையோடு பெண்ணை பலாத்காரம் செய்து வந்த அவரது மாமா அந்த பெண் மீது மண்ணெண்ணை ஊற்றி அவரை எரித்துள்ளார்.
காட்டன் பேட்டையை சேர்ந்த ரமேஷின் மனைவிக்கு அவரது மாமா ராஜூ அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு அவரது கணவர் ரமேஷும் உடந்தையாக இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணை ராஜூ பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த ராஜூ அந்த பெண்ணின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.
பலத்த காயமடைந்த அந்த பெண் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் கணவர் ரமேஷ் மற்றும் மாமா ராஜூ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.