செல்ஃபி எடுத்தால் ஜெயில்; உபி மக்களுக்கு புத்தாண்டு பரிசு; அகிலேஷ் கண்டனம்

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:48 IST)
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு இருக்கும் தெருவில் செல்ஃபி எடுத்தால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு இருக்கும் தெருவில் செல்ஃபி எடுத்தால் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
முதல்வர் யோகி ஆதித்யநாத் காலிதாஸ் மார்க் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த பகுதியில் நேற்று சிலர் செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர், இனி அந்த பகுதியில் செல்ஃபி எடுத்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
 
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
 
உபியில் இனி செல்ஃபி எடுத்தால் தண்டையாம். இதுதான் உபி மக்களுக்கு அரசு கொடுக்கும் புத்தாண்டு பரிசு என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த எச்சரிக்கை பலகையை நீக்கியுள்ளனர். இருந்தாலும் அந்த கட்டுபாடு நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்