அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

Prasanth K

திங்கள், 28 ஜூலை 2025 (09:10 IST)

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்டு மாதம் முதலாக மழைப்பொழிவு மெல்ல அதிகரித்து தீவிரமடையும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் வட மாநிலங்களிலும், அரபிக்கடலோர மாநிலங்களும் கனமழையை பெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவை பெற்றுள்ளது.

 

இந்த மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவிய நிலையில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கின்றனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள். அதன்படி, முதல் 2 வாரங்களில் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும். ஆகஸ்டு 3 முதல் 15 வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

ஆகஸ்டு 18 முதல் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்