முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளியது எஸ்.பி.ஐ வங்கி.. அதிக லாபம் பெற்று சாதனை..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (10:05 IST)
இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் நடப்பு காலாண்டில் அதிக லாபம் பெற்ற நிறுவனம் என்று எஸ்பிஐ வங்கி சாதனை செய்துள்ளது. 
 
கடந்த 11 ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் நிறுவனம் தான் அதிக லாபம் பெற்ற இந்திய நிறுவனம் என்ற பெயரை பெற்றிருந்த நிலையில் நடப்பு காலாண்டில் எஸ்பிஐ வங்கி முகேஷ் அம்பானியின் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. 
 
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 18,537 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் நிகர லாபம் 16,011 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 - 2012 நிதியாண்டில்  ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்த எஸ்பிஐ வங்கி தற்போது மீண்டும்  11 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்