’இந்தியா’ கூட்டணியின் ஒரே நம்பிக்கை சரத்பவார் .. அவரும் தடுமாறுகிறாரா?

Mahendran

வெள்ளி, 26 ஜனவரி 2024 (16:54 IST)
இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே கிட்டத்தட்ட விலகுவதாக மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்தியா கூட்டணியின் ஒரே நம்பிக்கையாக சரத்பவார் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களாக மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார், நிதீஷ் குமார், மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால், இருவரும் தங்களது மாநிலங்களில் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டனர். 
 
நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜகவில் மீண்டும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருப்பதை உறுதி செய்வார் என்றாலும் சரத் பவார் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு தான்  பயன் அளிக்கும் என்று என்றும் தங்களது கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவருக்கு இந்தியா கூட்டணியில் இருந்து கழண்டு கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கழண்டு கொண்டால் இந்தியா கூட்டணியே  சுக்குநூறாக உடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்