இங்கிலாந்து ஸ்பின்னர்கள் மேல்தான் என் கவலை… கெவின் பீட்டர்சன் காட்டம்!

vinoth

வெள்ளி, 26 ஜனவரி 2024 (08:43 IST)
இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்களிலும், சுப்மன் கில் 14 ரன்களிலும், ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள்க்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர்.

சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய ஸ்பின்னர்களான ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இங்கிலாந்து ஸ்பின்னர்களால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் “எனது மிகப்பெரிய கவலையாக இருப்பது ஸ்பின்னர்கள்தான். 2012 ஆம் ஆண்டு நாங்கள் இந்திய மண்ணில் தொடரை வென்றதற்குக் காரணமே எங்களிடம் பனேசர் மற்றும் ஸ்வான் போன்ற சிறந்த ஸ்பின்னர்கள் இருந்ததுதான். ஆனால் இப்போது இப்போதுள்ள ஸ்பின்னர்களிடம் அப்படி ஒரு பவுலிங்கை பார்க்க முடியவில்லை.ஐதராபாத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இங்கிலாந்து ஸ்பின்னர்களால் செயல்பட முடியவில்லை” எனக் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்