சதத்தை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் ஸ்கோர்..!

Siva

வெள்ளி, 26 ஜனவரி 2024 (11:17 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
அந்த அணி 64 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடிய 70 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இதனை அடுத்து தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிசை விளையாடுகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 80 ரன்கள் அடித்து சதத்தை மிஸ் செய்தார். கேஎல் ராகுல் 47 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார்.
 
இந்த நிலையில் இந்திய அணி 45 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்