நெருங்கும் தேர்தல்; ஜம்ப் அடிக்கும் அரசியல்வாதிகள்! – குழப்பத்தில் உத்தரபிரதேசம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:55 IST)
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தல் 7 கட்டங்களாக பிப்ரவரி 10 தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என பல கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

அதேசமயம், உத்தர பிரதேச பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உ.பியில் பாஜக – சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரான முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரின் மருமகளே பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்