அதிமுகவுடன் கூட்டணி தொடரும், ஆனால் இது வேண்டும்... பொன்னார் தடாலடி!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (17:03 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து ஜனவரி 19 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்., கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்கின்றோம். சிவகாசி மாநகராட்சியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும். அதிமுக ஒதுக்கும் என நம்புகிறோம். கொரோனா பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, ஜனநாயக முறையில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்