ராகுல்காந்திக்கு துணைவியாவது கிடைக்கட்டும்: பிரார்த்தனை செய்த பெண் துறவி

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (07:44 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு ஆட்சியை பிடிக்கும் ராசி தான் இல்லை, அவருக்கு துணைவியாவது கிடைக்கும் என்று பிரார்த்தனை செய்ததாக பெண் துறவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தற்போது 48 வயது ஆகிறது இன்னும் அவர் திருமணம் செய்யாமலே உள்ளார். பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த பின்னர்தான் திருமணம் என்று அவர் குறிக்கோளுடன் இருப்பதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் இந்துத்துவா தலைவரும் பெண் துறவியுமான சாத்வி பிராச்சி நேற்று உபி மாநிலத்தில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தார். அவர் என்ன பிரார்த்தனை செய்தார் என்று செய்தியாளர்க்ள் கேட்டபோது மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க போவதில்லை. எனவே, ராகுலுக்கு விரைவில் நல்ல துணைவியாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ததாக கூறினார். 
 
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், ராகுல்காந்தி போன்ற  பிரபலமானவர்களை பற்றி கருத்து கூறி தங்களை முன்னிறுத்தி கொள்வது தற்போது டிரெண்டாக உருவாகி வருவதாகவும், அந்த வகையில் இதுவும் ஒன்று என்றும், ஆனால் . இது அருவருக்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்