டுவிட்டரின் விதிமுறையை மீறிய சச்சின்; ரசிகர்கள் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (12:26 IST)
சச்சின் செய்த டுவீட் டுவிட்டரின் விதிமுறையை மீறுவதாகும் என பலரும் தெரிவித்துள்ளனர்.


 

 
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டுவிட்டரில் தொடர்ந்து தனது கருத்துகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சுமார் 1.7 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். சச்சின் தான் நடித்த உடல் ஆரோக்கியம் குறித்த விளம்பரம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
 
அதில், உங்கள் நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல் நிறைய சாக்கு போக்கு சொல்கிறார்களா? #NoExcuse என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் வசிக்கும் நகரம் மற்றும் மொபைல் எண்ணோடு டேக் செய்யுங்கள். நான் அவர்களோடு பேசுகிறேன் என பதிவிட்டு இருந்தார்.
 
உடனே அவரது ரசிகர்கள் சிலர் தங்களது நண்பர்களின் மொபைல் எண்களை பதிவு செய்தனர். இந்நிலையில் சச்சின் டுவீட் தனியுரிமையை பாதிக்கும் விதமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சச்சின் செய்த டுவீட், டுவிட்டரின் விதிமுறையை மீறுவதாகும் என தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்