சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுவில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்து கேரள அரசு கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களை உள்ளே அனுமதிக்கும் கேரள அரசின் உத்தரவுக்கு எதிராக இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணையில் பெண்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சீராய்வு மனுவுக்கான தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.
அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் தீர்ப்பு பலராலும் உற்று நோக்கப்படுகிறது.