சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கில் நாளை தீர்ப்பு...

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (16:56 IST)
சபரிமலை ஐயப்பன்  கோவிலுக்குள் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பை அளிக்க உள்ளது.
 
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10வயதுக்குள்ளான சிறுமியர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே அனுமதிகும் வழக்கம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.
 
இந்நிலையில்  10 வயது முதல் 50 வயதுவரையுள்ள அனைத்து பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய இளைஞர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இது பெண்களின் பெண்களின் உரிமைக்கு எதிரானவை மற்றும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்றுஅந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அதேசமயம் சபரிமலை கோவில் நிர்வாகம் இதற்கு கடுமையான எதிர்வாதத்தை முன் வைத்தது. ஆனால் கேரள அரசும் பெண்கள் சரிமலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தது.
 
ஏற்கனவே இந்த  வழக்கை விசாரித்து  கருத்து தெரிவித்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான  அரசியல் சாசன அமர்வு: இந்த  நடைகுறை அடைப்படைஉரிமைக்கு எதிரானவை என்றும்  சட்டப்பிரிவு 14,15,17,26,27  ஆகிய அடிப்படை நடைமுறைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறியிருந்தனர்.
 
இந்த நிலையின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதியளிக்கும் விவகாரம் தொடர்பன வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தனது தீர்ப்பை அளிக்கும் என செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்