வயசுக் கோளாரில் வாலிபன் செய்த அட்டூழியம்…

செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:04 IST)
கேரளா மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த பயாஸ் முபீன்(19) வேலை வெட்டி எதுவும் இன்றி தன் மனம் போன போக்கில் சுற்றித்திரிந்திருக்கிறார்.


இந்நிலையில் முகநூலில் (பேஸ்புக்) ஒரு கணக்கு தொடங்கி தனது முகத்தின் தோற்றத்தை மாற்றி மார்பில் செய்து அதில் பதிவிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக தான் மாடலாக இருப்பதாகவும், ஐந்து  நட்சத்திர விடுதிகளில் ’டிஜே’ வாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதை நம்பி பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் இவருக்கு  நட்பாக பழகினர்.

இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த  ஒரு பள்ளி மாணவியை கடத்தி சென்ற முபீன் அவரை வன்புணர்வு செய்ததாக கோழிக்கோடு போலீஸாரிடம் புகார்  செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் பயாஸை கைது செய்தனர். அவரை விசரித்த போது, பல பல இளம் பெண்களை இவர்  வன்புணர்வு செய்துள்ளது தெரிய வந்தது.

இவன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன் என்று பல பெண்களிடம் பொய் கூறி அவர்களிடமிருந்து பணத்தை வாங்கி  மோசடி செய்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்தது.

நவீன தொழில் நுட்பங்களை சாதகமாக பயன்படுத்தி ஏமாற்றிப் பிழைப்போர் இனியாவதும் இந்த மாதிரியான அட்டூழியங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதே தேசத்து நலம் விரும்பிகளின் எதிபார்ப்பாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்