ஒரே ஒரு திட்டத்தின் மூலம் மட்டும் ரூ.13000 கோடி சேமிப்பு: பிரதமர் மோடி தகவல்

செவ்வாய், 8 மார்ச் 2022 (08:34 IST)
மத்திய அரசின் ஒரே ஒரு திட்டத்தின் மூலம் மட்டும் 13 ஆயிரம் கோடி மக்களின் பணம் சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்
 
 பாரதிய மக்கள் மருந்தகம் என்ற திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த திட்டத்தின் மூலம் மருந்துகள் மலிவு விலையில் விற்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இதனால் ஏழை எளிய மக்களின் பணம் 13,000 கோடி வரை சேமிக்க பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை தனியார் மருத்துவ மனைகளிலும் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவு செய்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் மருந்தகம் கொண்டாடப்படுவதாகவும் மருந்து உரிமையாளர்கள் மற்றும் மருந்தக பயனாளிகள் உடன் காணொளியில் பிரதமர் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுவரை 13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏழை எளிய நடுத்தர மக்களின் பணம் சேமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்