ரஷ்யாவுக்கே அகதிகளாக செல்லும் உக்ரைன் மக்கள்!

செவ்வாய், 8 மார்ச் 2022 (08:17 IST)
ரஷ்யாவுக்கே அகதிகளாக செல்லும் உக்ரைன் மக்கள்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கே சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
உக்ரைனில் உள்ள கிழக்கு மாகாண மக்கள் இதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் வரை ரஷ்யாவில் அகதிகளாக வந்து உள்ளதாக ஐநாவில் ரஷ்யா தகவல் அளித்துள்ளது 
 
இதுவரை உலகில் எங்குமே நடக்காத வகையில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் நாட்டிற்கே அகதிகளாக மக்கள் சென்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்