ரஷ்யாவில் சேவையை நிறுத்திய விசா, மாஸ்டர்கார்டு! – ரஷ்ய மக்கள் அவதி!

ஞாயிறு, 6 மார்ச் 2022 (10:10 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதை கண்டிக்கும் வகையில் விசா, மாஸ்டர்கார்டு தனது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளதால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

அதை தொடர்ந்து பிரபல மின்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இண்டெல், ஹெச்.பி, ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

அதை தொடர்ந்து பணபரிமாற்ற கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கும் விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இதனால் பணபரிவர்த்தனையில் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியிடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்