பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (08:05 IST)
ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவால் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தேகைமலையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு திருமணமாகி சுபிக்சன் (6), மெர்வின் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 14 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து சோதனை சாவடி முழுதும் மூடப்பட்டது. அதில் பாதுகாப்பு பணியில் இருந்த  தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானம் மூலம் அவரது உடல் தமிழகத்தை வந்தடைகிறது. பின் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்