இளம்பெண்ணை 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பலாத்காரம் செய்த கும்பல்: புலனாய்வு குழு அமைப்பு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (10:19 IST)
ஒரு வாரத்திற்கு முன்பு ஹரியானா மாநிலம் ரோக்டாக்கில் 21 வயது தலித் பெண் ஒருவர், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


 
 
ஹரியானாவில் உள்ள ரோட்டாக்கில் 20 வயது பெண் ஒருவரை 5 பேர் கும்பல் ஒன்று கடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கல்லூரி அருகே வைத்து பலாத்காரம் செய்து சுக்புரா என்ற இடத்தில் புதர் பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
 
அவ்வழியாக வந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்த பெண் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அனில், மாசம் குமார், ஜக்மோகன், சந்தீப், ஆகாஷ், சந்தீப் சிங் ஆகிய 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
 
இந்த 5 பேரும் கடந்த 2013-ஆம் ஆண்டு இதே பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது இவரை கடத்திக்கொண்டு போய் பலாத்காரம் செய்தனர் என்பது அந்த பெண்ணின் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.
 
இந்நிலையில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளின் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்