இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியா புறக்கணிப்பு

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (17:30 IST)
இலங்கையில் மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநாவில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு இதைப்புற்க்கணித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு தாக்குதல் நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்டு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் இன்று ஐநாடுகள் சபையில் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்தது. 13 வது அரசியலமைபு சட்டதிருத்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்