இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் உலகின் வளர்ச்சி என்ஜின் ஆக உருவாக இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்,
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரித்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.