புதிய வருடமான இன்று முதல் இந்தியா முழுவதும் ஏடிஎம்களுக்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறுதனியார், அரசு வங்கிகளும் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றின் ஏடிஎம் மையங்கள் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுக்க முடியும்.
அதற்கு மேல் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணம் இன்று முதல் ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது. ஏடிஎம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்காக இந்த தொகை வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.