ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

Mahendran

புதன், 6 ஆகஸ்ட் 2025 (11:18 IST)
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்த விகிதம் 5.5% ஆகவே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் ஒருமுறை கூடும் ரிசர்வ் வங்கி, பொருளாதார நிலவரங்களை ஆராய்ந்து ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவெடுக்கும்.அந்த வகையில் இன்று  நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
"வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி நிலைகள், எதிர்கால தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாகவும் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கமளித்தார்.
 
கடந்த பிப்ரவரி முதல் மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் 1% குறைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்