கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த மருந்து!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (09:00 IST)
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, தீவிர பாதிப்புக்குள்ளான கொரோனா நோயாளிகளுக்கு அவசரநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை மீண்டும் பரவி உச்சம் தொட்டு வருவதால் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும். வீட்டுப் பயன்பாடுகளுக்கு வழங்கக் கூடாது என நிதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே.பால் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்