தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிற்கும் ரெட் அலர்ட் - பொதுமக்கள் கடும் பீதி

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (07:31 IST)
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அக்டோபர் 7-ந்தேதி மிக அதீத கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
 
கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசிக்க இருக்கிறார்.
 
இந்நிலையில் தமிழகத்தைப் போலவே கேரள மாவட்டங்களான இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையின் பீதியிலிருந்தே இன்னும் வெளிவராத கேரள மக்கள் மீண்டும் ரெட் அலர்ட் விடுத்திருப்பதால் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்