ஓட்டல் வாடகை கட்ட முடியாததால் தற்கொலை நாடகம் செய்த இளம்ஜோடி

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (06:56 IST)
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் சேலம் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்து உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டல் பில் கட்டமுடியாததால் தற்கொலை முயற்சி நாடகம் செய்ததாக செய்தி வெளிவந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் தர்மபுரியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் ஃபேஸ்புக் மூலம் சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமுகமாகி அதன் பின் நட்பு, காதல் என அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் ஓட்டல் ஒன்றில் தங்கிய இந்த ஜோடி மூன்று நாட்கள் உல்லாசமாக இருந்தனர். ஆனால் ஓட்டல் பில் ரூ.30ஆயிரம் கட்ட இவர்களிடம் பணம் இல்லை. இதனால் இளம்பெண் ஒருசில தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட அந்த வாலிபரும் நாடகமாடி ஓட்டலில் இருந்து வெளியேறி மருத்துவமனை சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஓட்டல் பில் கட்ட முடியாததால் காதல் ஜோடி தற்கொலை நாடகம் ஆடியதாக தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் இருந்து வந்த அவர்கள் ஓட்டல் பில்லை செட்டில் செய்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்