தியேட்டர்களில் இனி தேசிய கீதம் கட்டாயம் இல்லை: மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (06:02 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த சமயத்தில் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் கொடுத்தது

இந்த நிலையில் தற்போது திடீரென தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் அமைச்சர் குழு திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்புவது குறித்து புதிய வழிமுறைகளை வகுக்கும் வரை தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று  கூறியுள்ளது. எனவே இனிமேல் திரையரங்குகளில் தேசிய கீதம் திரையிடப்படுவது நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்