நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும் வெளியிட்டார். அதில் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டமும் அடக்கம்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் கூறியதாவது, பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என கூறினார்.
மேலும், பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, இன்னும் எத்தனை சதவிகித பங்குகள் விற்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.