4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்கு முடக்கப்படும் - ரிசர்வ் வங்கி

திங்கள், 28 மே 2018 (17:44 IST)
ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

 
அண்மையில் எஸ்பிஐ வங்கி கணக்கின் குறைந்தபட்ச தொகை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் சிரமத்துக்கு உள்ளானது அனவரும் அறிந்த ஒன்று. இதைத்தொடர்ந்து அடிப்படை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
 
அடிப்படை வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகை தேவையில்லை என்று ஆர்.பி.ஐ அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த அடிப்படை வங்கி கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
ஜன்தன் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு அம்மாதம் முடியும் வரை முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்