மேலும், இது தொடர்பாக பயனர்கள் மற்றும் வர்த்தகர்களை எச்சரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிரப்டோ கரன்சி வைத்திருப்பவர்கள், மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிட்காயின் தடையோடு சேர்த்து, ரிசர்வ் வங்கிக்கென ஒரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான செயல்முறையில் ஈடுப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.