4 வங்கிகளுக்கு அபராதம் – ஆர்.பி.ஐ. அதிரடி உத்தரவு !

வெள்ளி, 5 ஜூலை 2019 (12:43 IST)
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 4 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் படிவம், அந்நியச் செலாவணி மோசடி, கரண்ட் அக்கவுண்ட் விதிமுறைகளைப் பின்பற்றாமை ஆகியவற்றைப் பின்பற்றாததால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி மற்றுக் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் மீது புகார் எழுந்தது.

இதனால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி ஆகியவற்றுக்கு தலா 50 லட்ச ரூபாயும் கார்ப்பரேஷன் வங்கிக்கு 25 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ, அபராதம் விதிமுறை மீறல், மோசடி, RBI, penalty, scam

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்