முட்டுக்கட்டை போட்ட RBI; முடங்கும் HDFC - தவிப்பில் வாடிக்கையாளர்கள் !!

வெள்ளி, 4 டிசம்பர் 2020 (08:29 IST)
தனியார் வங்கியான HDFC வங்கியின் சில சேவைகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் HDFC-க்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் HDFC வங்கியின் டிஜிட்டல் சேவைகள் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணி நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர். 
 
இதனைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி HDFC வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தை கேட்டது. இதற்கு, முதன்மை டேட்டா மையத்தில் மின்சாரம் செயலிழந்ததால் நவம்பர் 21 வங்கி மற்றும் கட்டண முறைமை தடைப்பட்டதாக HDFC வங்கி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போதைய தகவலின் படி HDFC வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை பயனர்களுக்கு கொடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்