ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது. கடைசியாக நடந்த மூன்றாவது போட்டியை இந்திய அணி ஆறுதல் வெற்றியாக பெற்றது. இந்நிலையில் நாளை முதல் டி 20 போட்டி நடக்க உள்ளது. இதில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்கும் முனைப்பில் உள்ளது.