ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் - அமைச்சர் ஹர்ஷவர்தன்

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:42 IST)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை வாங்கிய நிறுவனத்திடமே திருப்பி அளித்துவிடவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு பதிலாக RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியது.


இந்நிலையில், தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது : ரேபிட் டெஸ்ட் கருவி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் . ஐசிஎம் ஆர் ஒப்புதல் அளித்த பின் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்