அயோத்தி தொகுதியில் பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது. தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமர் கோவில் கட்டப்பட்டதால், உத்திரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என பாஜக வியூகம் வகுத்திருந்தது.
ஆனால் அயோத்தி தொகுதிக்குட்பட்ட பைஸாபாத்தில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். இது பாஜகவிற்கு பெரும் இடியாக விழுந்துள்ளது. இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.