சம்பல் ஆற்றில் கவிழ்ந்த கார்; 8 பேர் பலி! – ராஜஸ்தானில் சோகம்!

ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:06 IST)
ராஜஸ்தானில் திருமணம் ஒன்றிற்காக சென்ற குடும்பத்தினார் கார் கவிழ்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஒன்றிற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். சம்பல் ஆற்றில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்து ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானார்கள். மீட்பு துறையினர் கிரேன் உதவியுடன் காரை ஆற்றிலிருந்து எடுத்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்