கேட்டை தாண்டி வந்த பைக்.; நொடியில் நொறுக்கிய ரயில்! – வைரலாகும் வீடியோ!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:58 IST)
மும்பையில் ரயில் கேட்டை தாண்டி சென்ற பைக்கை ரயில் மோதி நொறுக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் பல சமயங்களில் ஆள் இல்லா ரயில்வே கட்டை தாண்ட வாகனங்கள் முயற்சிப்பதும், அந்த சமயம் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் அதை சரியாக பலர் பின்பற்றுவதில்லை.

சமீபத்தில் மும்பையில் நடந்த இவ்வாறான விபத்து வீடியோ ஒன்றை சென்னை ரயில்வே கோட்டம் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளது. அதில் பைக்கில் ரயில்வே கேட்டை தாண்டி செல்ல ஒரு நபர் முயற்சிக்கிறார். ஆனால் ரயில் வேகமாக வருவதை கண்டு பைக்கை போட்டு விட்டு ஓடுகிறார். நொடி பொழுதில் பைக்கை மோதி சுக்கு நூறாக்கி செல்கிறது விரைவு ரயில். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள சென்னை கோட்டம் இதுபோன்ற செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்