இன்று அதிகாலை 6 மணிக்கு கான்பூரின் டாட் மில் பகுதிக்கு வந்த எலக்ட்ரிக் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி அங்கு நின்றிருந்த பயணிகள் மீது மோதிச் சென்றுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.