ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டம்! – பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயக்கம்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (10:25 IST)
ராஜஸ்தானில் மகாசிவராத்திரி பூஜையில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று இரவு மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதற்காக பக்தர்கள் பலர் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானின் துங்காபூர் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பூர் கிராமத்தில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் மயங்கி விழுந்ததாலும், வாந்தி எடுத்ததாலும் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

70க்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சாப்பிட்ட பிரசாதம் ஃபுட் பாயிசனாக ஆயிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்