டூவீலர் பழுதுபார்க்கும் கடைக்கு ரூ.3.71 கோடி மின்கட்டணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (07:15 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் டூவீலர் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு 3.71 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றில் ஒன்றை வாலிபர் ஒருவர் வாடகைக்கு எடுத்து டூவீலர் பழுது பார்க்கும் பணியை செய்து வந்தார். அவருக்கு சராசரியாக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென இந்த மாதம் அவருக்கு 3 கோடியே 71 லட்சம் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் அதனை உடனடியாக செலுத்த வேண்டுமென்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஓனர் விவசாயி மற்றும் டூவீலர் பழுது பார்க்கும் கடை வைத்துள்ள வாலிபர் ஆகிய இருவரும் மின்சார வாரிய அலுவலகம் சென்றனர்
 
அங்கு சென்று அவருடைய மின்கணக்கை சோதனை செய்தபோது மின் கணக்கீட்டாளர் செய்த தவறால் அதிக மின்கட்டணம் பதிவு செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. அதன் பின் அவரிடம் 6,400 ரூபாய் மட்டும் மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணமாக பெற்றுக்கொண்டனர்
 
டூவீலர் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு 3.71 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்