ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் பயண சலுகை கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டில் சலுகை பெற ஆதார் கட்டாயம் என ரயில்வே துறை அறிவித்தது.
ஆனால் தற்போது இது திரும்பபெறப்பட்டுள்ளது. ரயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என ரயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வாறு முத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என் கூறப்பட்டதற்கு காரணம் ஏதும் வெளியாகவில்லை.