ரயில் பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி

சனி, 7 ஏப்ரல் 2018 (08:22 IST)
நாடு முழுவதும் ரயில்கள் மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பேருந்து கட்டணம் அதிகம் என்ற காரணத்தாலும், ரயிலில் வசதிகள் அதிகம் என்பதாலும் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புவதுண்டு.

இந்த நிலையில் அவ்வபோது ரயில் கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் தற்போது ரயிலில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் ரயில்குடிநீர் ஆகியவற்றுக்கும் 5% ஜிஎஸ்டி வரி  விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நீருக்கு 5% ஜிஎஸ்டி வரி மற்றும் ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்து  மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் கேட்டரிங் பொருட்கள் அனைத்தும் விலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ரயில் பயணிகள் விரும்பி சாப்பிடும்  தயிர்சாதம், பூரி, சப்பாத்தி, பிரியாணி மற்றும் காபி, டீ ஆகிய அனைத்துமே விலை உயரும் என்பதால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்