மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட 'ஆபரேஷன் வீட் அவுட்' நடவடிக்கையின் கீழ், பெங்களூரு மற்றும் போபால் ரயில் நிலையங்களில் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கடத்தப்படவிருந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பெங்களூரில் 29.88 கிலோவும், போபாலில் 24.18 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு போதைப்பொருள் சரக்குகளும் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட இருந்தவை.
இந்த நடவடிக்கையுடன், தாய்லாந்தில் இருந்து திரும்பிய ஒரு நபர் பெங்களூரு ஹோட்டல் ஒன்றில் 18 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பிடிபட்டார். இந்த கடத்தல்களுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி டெல்லியில் ரூ.1.02 கோடி பணத்துடன் கைது செய்யப்பட்டார். மொத்தமாக, இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.