ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

வியாழன், 14 டிசம்பர் 2017 (09:00 IST)
ராகுல் காந்தி தேர்தல் விதியை மீறி தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்ததால் அவரிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் சட்டசபையின் முதல் கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி காலை முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, குஜராத் தேர்தல் பற்றி தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். ராகுலின் பேட்டியை தொலைக்காட்சி நிறுவனம்  டிவி சேனலில் ஒளிபரப்பியது. ஓட்டுப்பதிவு முடிவதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள், தேர்தல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்புவது, சட்ட விதிகளை மீறிய செயலாகும். இதைப்பற்றி  தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்ததையடுத்து, அந்த பேட்டிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டது.
 
பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யுமாறு குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்